பிரியங்கா ரெட்டி கொலை எதிரொலி: மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் சமீபத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்பவர் நான்கு பேர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னர் பெண்கள் பாதுகாப்பு குறித்து தெலுங்கானா மாநிலம் கூடுதல் அக்கறை எடுத்து ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
அந்த வகையில் இதுவரை மெட்ரோ ரயில்களில் பாதுகாப்பு கருதி பெப்பர் ஸ்ப்ரே போன்ற பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது பெண்கள் தங்களுடன் பெப்பர் ஸ்ப்ரேயை எடுத்துச் செல்லலாம் என்று ஐதராபாத் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலியல் பலாத்கார குற்றவாளிகள் இடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பெண்கள் தங்களுடன் பெப்பர் ஸ்பிரேவை எடுத்து செல்லலாம் என்று ஐதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் என்.வி.எஸ் ரெட்டி சற்றுமுன் அறிவித்துள்ளார். ஏற்கனவே இது போன்ற ஒரு முடிவை பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் காணாமல் போனதாக வரும் புகார்கள் குறித்து உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்கள் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது
அதேபோல் பிரியங்கா ரெட்டி பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காரணமாக இனிமேல் வாகனங்களில் மட்டுமே பெட்ரோல் கொடுக்க வேண்டும் என்றும் பாட்டில்களில் பெட்ரோல் கொடுக்கக்கூடாது என்றும் பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதுபோன்ற நடவடிக்கைகளால் பிரியங்கா ரெட்டி கொலை போல் மேலும் ஒரு கொலை ஏற்படாமல் தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments