ஆண் உறுப்பை அறுத்து மருத்துவ மாணவர் தற்கொலை… பதற வைக்கும் காரணம்?

  • IndiaGlitz, [Tuesday,July 11 2023]

தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவம் பயின்றுவரும் மாணவர் ஒருவர் தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்டு கொடூரமாக தற்கொலை செய்துகொண்டுள்ளர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத் பகுதியின் புறநகரில் வசித்துவருபவர் தீட்சித் ரெட்டி. 21 வயதான இவர் செகந்திராபாத் பகுதியில் இயங்கிவரும் காந்தி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் தீட்சித் ரெட்டிக்குஉடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் அதையடுத்து அவர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக உடல்நிலை காரணமாக கடும் மனஉளைச்சலில் இருந்துவந்த தீட்சித் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதையடுத்து அதிர்ஷ்டவசமாக அவரைக் காப்பாற்றிய பெற்றோர் மனநல மருத்துவரிம் அழைத்துச் சென்று கவுன்சிங் கொடுத்து அவரைப் பாதுகாத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தீட்சித்தின் பெற்றோர் வெளியூருக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்த அவனது பெற்றோர் கதவு உட்பக்கமாக தாளிடப்பட்டு இருப்பதையும் தனது மகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தனது மகனை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் ஏற்கனவே தீட்சித் இறந்துவிட்டதாகக் கூறிய மருத்துவர்கள் அவர் தனது ஆண் உறுப்பை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட தகவலையும் தெரிவித்து உள்ளனர். இந்தச் சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் கடும் பதட்டத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.