மனைவி கறுப்பா இருக்கா… அதனால கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூரக் கணவன்!!!

  • IndiaGlitz, [Wednesday,August 19 2020]

 

ஆந்திரமாநிலம் அனந்தபூர் அடுத்த குண்டக்கல் பகுதியை சார்ந்த யோகி என்பவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் அருணா என்ற பெண்மணியோடு திருமணம் நடந்திருக்கிறது. யோகி ஹைத்ராபாத்தில் வேலை பார்த்து வந்ததால் அங்கு இருவரும் குடியேறியதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த தம்பதிகள் கொஞ்ச நாட்களுக்குப் பின் கடும் வாக்குவாதம், சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

கணவர் யோகி நீ கறுப்பாக இருக்கிறாய் என மனைவிமீது தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்ததாகக் கூறப்படுகிறது. நேற்று (ஆகஸ்ட் 18) காலை திடீரென்று இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது யோகி ஆத்திரத்தில் கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். மேலும் தானும் தற்கொலைக்கு முயன்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது மிகவும் அபாயமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனறும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தியா போன்ற நாடுகளில் வெள்ளையாக இருப்பது மட்டுமே அழகாகப் பார்க்கப்படுகிறது. கறுப்பு வேண்டாத நிறமாகவும் அசிங்கமாகவும் கருதும் எண்ணப்போக்கு இருந்து வருகிறது. இந்த எண்ணம் பலருக்கு இருந்தாலும் சில நேரங்களிலும் அது உயிரைக் குடிக்கும் அளவிற்கு செல்வதுதான் பயங்கர சோகத்தை வரவழைத்து விடுகிறது. தற்போது இக்கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஆகஸ்போஃர்ட் கொரோனா தடுப்பூசி- இந்தியர்களுக்கு முதலில் கிடைக்க வாய்ப்பு!!! பரபரப்பு தகவல்!!!

இங்கிலாந்தின் அஸ்ட்ரோஜெனெகா மருந்து நிறுவனமும் ஆக்ஸ்போஃர்ட் பல்கலைக் கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி கோஷீல்ட் தற்போது இங்கிலாந்து,

காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்க ரூ.10,700 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம்!!! அதிரடி காட்டும் தமிழக முதல்வர்!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் நீர்மேலாண்மை திட்டங்களைக் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்துடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

ஒருநாளைக்கு ஒரு பெக்கோட நிறுத்துங்க… அமெரிக்க மக்களை எச்சரிக்கும் புது விதிமுறை!!!

அமெரிக்க மக்களிடையே நாளுக்கு நாள் மது பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும்

மூணாறு நிலச்சரிவு சம்பவம்- பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்த அவலம்!!!

கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை அடுத்த ராஜமலா, பெட்டிமாடா பகுதியில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 61 பேர் உயிரிழந்து

 ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்  கேவியட் மனு தாக்கல்!!!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு கழிவுகள் வெளியாகி அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.