லிவ்-இன் உறவிலிருந்த பெண்ணை 6 துண்டுகளாக வெட்டிய காதலன்… ஃப்ட்ரிஜில் வைத்து பாதுகாத்த கொடூரம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹைதராபாத்தில் வசித்துவந்த நபர் ஒருவர் தன்னுடன் லிவ்-இன் உறவுமுறையில் வாழ்ந்துவந்த பெண்ணையே கொன்று அவருடைய உடலை 6 துண்டுகளாக வெட்டி தன் வீட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
ஹைதராபாத்தில் 55 வயதான யர்ரம் அனுராதா ரெட்டி என்பவர் தன்னுடைய கணவரை இழந்த நிலையில் சந்திரமோகன் (48) எனும் நபருடன் காதல் ஏற்பட்டு அவருடைய வீட்டின் கீழ் தளத்திலேயே வசித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்துகொள்ளாமலேயே தன்னுடன் வாழ்ந்துவந்த அனுராதாவை, சந்திரமோகன் கொன்று, தலையை மட்டும் சாக்கடையின் வீசியதாகத் தற்போது போலீசார் தகவல் வெளியிட்டுள்ள உள்ளனர். மேலும் அவருடைய உடல்பாகங்களை 6 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய போலீசார், அனுராதா வட்டிக்கு பணம் கொடுக்கும் வேலையைச் செய்துவந்ததாகவும் அதேபோல சந்திரமோகனுக்கு அவர் ரூ.7 லட்சம் கடன் கொடுத்திருந்ததாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் அனுராதா தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு சந்திரமோகனுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார். இதனால் கடந்த சில தினங்களாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அனுராதாவை தீர்த்துக்கட்ட நினைத்த சந்திரமோகன் அவரை மே 12 ஆம் தேதி கொலை செய்துள்ளார். உடலை அப்புறப்படுத்த வேண்டி, கடைக்குச் சென்ற சந்திரமோகன் கல் வெட்டும் இயந்திரங்களை வாங்கிவந்து தலை, கை, கால் போன்றவற்றை தனித்தனியாக வெட்டி எடுத்து தன்வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார். இதில் தலையை மட்டும் கடந்த 17 ஆம் தேதியன்று சாக்கடையில் வீசியுள்ளார். அந்த தலையை துப்புறவுத் தொழிலாளி ஒருவர் கண்டுபிடித்த நிலையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து இறுதியில் அனுராதா கொலை சம்பவத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து சந்திரமோகனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அனைத்துக் குற்றங்களையும் அவர் ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே டெல்லியில் ஷரத்தா வாக்கர் எனும் இளம் பெண்ணை அவருடைய காதலன் 33 துண்டுகளாக வெட்டி குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த அதிருப்தி சம்பவத்தைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நடந்த இந்தச் சம்பவம் மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com