நீட் தேர்வு தோல்வி எதிரொலி: மேலும் ஒரு மாணவி தற்கொலை
Send us your feedback to audioarticles@vaarta.com
நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் டெல்லியை சேர்ந்த மாணவர் ஒருவரும் நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வு தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த ஜாஸ்லின் என்ற மாணவிதான் நீட் தேர்வுக்கு பலியான 3வது மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலதிபர் ரன்வீர்சிங் என்பவரின் மகளான ஜாஸ்லின், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கடந்த இரண்டு நாட்களாக சோகமாக இருந்துள்ளனர். அவரது குடும்பத்தினர்களும், தோழிகளும் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இந்த நிலையில் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு தோழி ஒருவரின் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிய ஜாஸ்லின், ஐதரபாத்தில் உள்ள காஞ்சகுடா என்ற பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் 10வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து மரணம் அடைந்தார். அவர் அந்த கட்டிடத்தின் படியில் ஏறிச்சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
நீட் தேர்வால் இந்த ஆண்டு மட்டும் மூன்று உயிர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளது. இனிமேலும் ஒரு உயிர் கூட பலியாகாமல் இருக்க மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. அதேபோல் தேர்வின் தோல்வி என்பது வாழ்க்கையின் தோல்வி அல்ல என்பதையும் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout