16 வயது சிறுமியை திருமணம் செய்த 65 வயது முதியவர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அரபு நாடுகளை சேர்ந்த முதியவர்கள் இந்திய சிறுமிகளை திருமணம் செய்து தங்கள் நாட்டிற்கு அழைத்து செல்வதாக அவ்வப்போது புகார்கள் வந்துள்ள நிலையில் தற்போது ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு தனது நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளதாக திடுக்கிடும் புகார் ஒன்று வந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அவருடைய உறவினர் வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அந்த உறவினர்கள் ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது ஷேக் அகமது என்பவரிடம் ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு சிறுமியை அவருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
முதலில் ஓமன் சென்ற ஷேக் அப்துல்லா, பின்னர் அந்த சிறுமிக்கும் விசா எடுத்து வரவழைத்து கொண்டதாகவும், இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஓமன் நாட்டில் இருந்து பெற்றோருக்கு போன் செய்து சிறுமி தான் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், தன்னை மீட்கும்படியும் கதறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout