அவதூறு வழக்கு தொடர்ந்த சமந்தாவுக்கு நீதிபதி கூறிய அறிவுரை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்ததையடுத்து அவரது விவாகரத்து குறித்து ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பல்வேறு வதந்திகள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூறாக கருத்து சொல்பவர்கள் மீது சமந்தா சமீபத்தில் வழக்கு தொடுத்தார் என்பது தெரிந்ததே. இந்த வழக்கு இன்று ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்கு தொடர்வதை விட அவர்களை சமந்தா மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கலாம் என்று நீதிபதி அறிவுரை கூறினார்.
மேலும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்க்கை விவரங்களை பொது தளத்தில் பகிர்ந்து கொண்டு அதன்பின் அவதூறு வழக்குகளைத் தாக்கல் செய்கிறார்கள் என்றும் அவர் கருத்து கூறினார்.
இந்த நிலையில் சமந்தாவின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததை அடுத்து கோபமடைந்த நீதிபதி, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு கிடையாது என்றும், சமந்தா வழக்கை நடைமுறைப்படி தான் விசாரிக்க முடியும் என்றும், இந்த மனு சரியான நேரத்தில் விசாரணைக்கு வரும் என்றும் கூறினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com