ரூ.100க்கு பதில் ரூ.500. வள்ளலாக வாரி வழங்கிய ஏடிஎம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நாட்டில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்.கள் இயங்காமல் முடங்கி இருக்கும் நிலையில் ஐதராபாத் விமான நிலையத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் ரூ.100க்கு பதிலாக ரூ.500ஐ வள்ளல் போல் வாரி வழங்கியதால் ஒருசில நிமிடங்களில் ரூ.8 லட்சம் பறிபோனது.
ஐதராபாத் சம்ஷாகாத் என்ற பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கொடாக் மகேந்திரா வங்கி ஏ.டி.எம்.மில் 100 ரூபாய்க்கு பதிலாக தவறுதலாக 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளது. இந்த ஏடிஎம்-ல் பணம் எடுத்த ஒருவர் ரூ.2500 எடுத்த போது ஒரு 2000 ரூபாய் நோட்டும் ஐந்து 100 ரூபாய் நோட்டுக்களும் வருவதற்கு பதிலாக, ஒரு 2000 ரூபாயும் ஐந்து 500 ரூபாயும் என ரூ.4500 வந்துள்ளது
இந்த வாடிக்கையாளர் இதை உடனடியாக வங்கிக்கு தெரிவிக்காமல் அருகில் இருந்த நபர்களிடம் கூறினார். உடனே அங்கிருந்த பலர் முண்டியடித்து கொண்டு அந்த ஏடிஎம்-இல் பணம் எடுத்தனர். இதனால் ஒருசில நிமிடங்கள் ஏடிஎம்-இல் இருந்த பணம் முழுவதும் காலியானது.
இதுகுறித்து தகவல் அறிந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அந்த குறிப்பிட்ட ஏடிஎம்-ஐ சோதனை செய்ததில் ரூ.100 நோட்டுக்கள் வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 வைக்கப்பட்டிருந்ததால் இந்த தவறு நடந்துள்ளதாக கண்டறிந்தனர். மேலும் இழந்த ரூ.8 லட்சம் தொகையும் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் தொடர்பு கொண்டு மீட்கப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments