close
Choose your channels

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்? புதிய தகவல்

Saturday, July 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் 59வது படத்தை இயக்குவது யார்? என்பது குறித்த தகவல் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தது. இந்த பட்டியலில் விஷ்ணுவர்தன் உள்பட ஒருசில இயக்குனர்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அஜித்தின் அடுத்த படத்தை 'சதுரங்க வேட்டை' இயக்குனர் எச்.வினோத் இயக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் அஜித்தை சந்தித்த எச்.வினோத் ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதை அஜித்துக்கு பிடித்துவிட்டதால் அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் அல்லது தற்போது 'விசுவாசம்' படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே தளபதி விஜய்யின் 63வது படத்தை எச்.வினோத் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்கவுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment