நடத்தையில் சந்தேகம்… பட்டப்பகலில் மனைவியை ஓட ஓட அரிவாளால் வெட்டிய கணவன்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், உயிருக்குப் பயந்து சாலையில் ஓடிய தனது மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூர் எனும் பகுதியில் வசித்து வருபவர் குமார்(42). அவருடைய மனைவி தனலட்சுமி(38). இந்த தம்பதியினருக்கு தீபிகா(18), திலீப்(15) என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில் தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த குமார் அடிக்கடி அவருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான மனஸ்தாபங்களும் இருந்து வந்துள்ளது. இதையடுத்து நேற்று மதியம் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய குமார், தனலட்சுமி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து கடும் ஆத்திரம் அடைந்து உள்ளார். இதனால் இருவருக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த குமார் திடீரென்று அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனலட்சுமியின் இடது கையை வெட்டியிருக்கிறார். இதை முற்றிலும் எதிர்பாராத தனலட்சுமியின் உயிருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்திருக்கிறார். ஆனால் அவரை விடாமல் பின்னாலேயே குமார் துரத்திக் கொண்டு வந்ததால் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தனலட்சுமி பொத்தனூர் – ஜோடர்பாளையம் மெயின் ரோட்டிற்கே ஓடியிருக்கிறார்.
பின்னால் துரத்திக் கொண்டுவந்த குமார் மீண்டும் தனலட்சுமியின் வலது கையையும் வெட்டியிருக்கிறார். இதனால் அலறியடித்து கதறிக்கொண்டு வந்தததைப் பார்த்த பொதுமக்கள் குமாரை நோக்கி வர, குமார் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் தனலட்சுமியை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமைனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் நாமக்கல் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments