இறுதிச்சடங்கு செய்து 11 ஆண்டுகள் கழித்து உயிருடன் திரும்பி வந்த மனைவி: கணவர் இன்ப அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
இறந்து விட்டதாக கருதி இறுதிச்சடங்கு செய்யப்பட்ட பெண் உயிருடன் திரும்ப வந்தது அவரின் கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் நரசய்யா - சுனிதா தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 மகள்கள் உண்டு. கடந்த 2010ஆம் ஆண்டு சுனிதா திடீரென காணாமல் போனார். இதனையடுத்து மனைவியை பல்வேறு இடங்களில் நரசய்யா தேடிப்பார்த்தார். கிடைக்காத காரணத்தினால் தன் மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சில மாதங்களுக்கு பின்னர் ஒரு பெண்ணின் அழுகிய சடலத்தை காட்டி இவர்தான் உங்கள் மனைவி சுனிதா என்று கூறி ஒப்படைத்துள்ளனர். அந்த சடலத்தை எடுத்துச் சென்ற நரசய்யா இறுதி சடங்கு செய்து புதைத்தார்.
மேலும் மகள்களின் எதிர்காலம் கருதி வேறு திருமணம் அவர் கொள்ளவில்லை. பின்னர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற நரசய்யா விடுமுறையில் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்த நிலையில் அவரை தொடர்பு கொண்ட தமிழக குற்ற ஆவண காப்பக போலீசார் உங்களது மனைவி இறந்து போகவில்லை, பெரம்பலூரில் உள்ள காப்பகத்தில் பாதுகாப்பாக உள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் உங்கள் மனைவி அளித்த தகவலின் பேரில் தான் உங்களை நாங்கள் தொடர்பு கொள்கிறோம் என்று கூறி மனைவி சுனிதாவின் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளனர்
அந்த புகைப்படத்தை பார்த்த நரசய்யா இது தனது மனைவிதான் என்று பதில் அனுப்பியதோடு உடனடியாக புறப்பட்டு பெரம்பலூர் வந்தார். அவரிடத்தில் சுனிதா ஒப்படைக்கப்பட்டார். கடந்த 2011ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் பகுதியில் சுனிதா சுற்றித் திரிந்த போது ஒரு தொண்டு நிறுவனத்தினர் சுனிதாவை மீட்டு சிகிச்சை அளித்து பராமரித்து வந்துள்ளனர். தொண்டு நிறுவனத்தினரின் முயற்சியால் பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தன் மனைவியை அழைத்துக்கொண்டு சந்தோஷமாக நரசய்யா ஊருக்கு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments