அது என் குழந்தை இல்லை: வளைகாப்பு நிகழ்ச்சியில் மனைவியின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய கணவர்!

  • IndiaGlitz, [Thursday,November 05 2020]

மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியின்போது தனது மனைவியின் வயிற்றில் இருப்பது தன்னுடைய குழந்தை இல்லை என்றும் அது கள்ளக்காதலால் உருவான குழந்தை என்றும் கணவர் அம்பலப்படுத்திய வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் வளைகாப்பு நிகழ்ச்சியில் பேசும் கணவர் என் மனைவிக்கும் இதே வளைகாப்பு நிகழ்ச்சியில் வந்திருக்கும் ஒருவருக்கும் கள்ளக்காதல் உள்ளது என்றும், அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட உறவின் காரணமாகத்தான் தனது மனைவி கர்ப்பம் ஆனதாகவும் கூறி அதற்கான ஆதாரங்களை தனது வக்கீலிடம் இருந்து எடுத்து காட்டுகிறார்.

மேலும் தனது மனைவி 4 மாத கர்ப்பம் இல்லை என்றும், அவர் உண்மையில் 6 மாத கர்ப்பமாக உள்ளார் என்றும் கூறி அதற்கான ஆதாரத்தையும் எடுத்து காட்டுகிறார். மேலும் லேப்டாப்பை திறந்து ஒரு வீடியோவை வெளியிடுகிறார். அதில் அவரது மனைவியும் அந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் வந்திருந்த ஒருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருக்கின்றன.

இதனை அடுத்து தயவுசெய்து இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று அவரது மனைவி கெஞ்சுகிறார். ஆனாலும் தொடர்ந்த கணவர், ‘எனது மனைவிக்கும் கள்ளக்காதலனுக்கும் உருவான இந்த குழந்தையை தான் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து செல்கிறார். அவரது மனைவி கெஞ்சிக்கொண்டே பின் தொடர்கிறார்.

இதனை அடுத்து அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்கள், அந்த பெண்ணின் கர்ப்பத்துக்கு காரணமான நபரை அடித்து உதைக்கும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவை சுமார் 2.2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்பதும் இன்னும் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.