மனைவியின் தலையை துண்டித்து பைக்கில் எடுத்து சென்ற கணவன்! ஈரோடு அருகே பயங்கரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மனைவியின் தலை, உடலை தனித்தனியாக துண்டித்து அதனை பைக்கில் எடுத்து சென்ற கணவன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முனியப்பன் என்பவர் 19 வயது நிவேதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு இருவீட்டு பெற்றோர்களும் ஒப்புக்கொள்ளாததால் திருமணத்திற்கு பின் இருவரும் ஈரோடு வந்தனர். அங்கு முனியப்பன் டிரைவராகவும், நிவேதா ஒரு சூப்பர் மார்க்கெட்டிலும் வேலை பார்த்தனர்.
இந்த நிலையில் நிவேதா வேறொரு ஆணுடன் நெருக்கமாக பழகியதாக தெரிகிறது. இதனை முனியப்பன் தட்டி கேட்டதாகவும் இதனல் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முனியப்பன் குடிபோதையில் நிவேதாவிடம் இதுகுறித்து மீண்டும் சண்டை போட்டதால், தனது தாய்வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தார் நிவேதா. முனியப்பன் எவ்வளவோ சமாதானம் செய்தும் நிவேதா கேட்கவில்லை. இறுதியில் வேறு வழியின்றி தானே நிவேதாவை தாய்விட்டு அழைத்து சென்றுவிடுவதாக கூறியுள்ளார்.
நிவேதாவை அழைத்து கொண்டு ஒரு பைக்கில் முனியப்பன் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆள் இல்லாத இடத்தில் பைக்கை நிறுத்தி மறைத்து வைத்திருந்த கத்தியால் நிவேதாவை கொலை செய்துள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காமல் தலை, உடல் என தனித்தனியாக துண்டித்து அதனை பைக்கில் கொண்டு சென்றுள்ளார். இந்த நிலையில் கீழ்பவானி என்ற பகுதிக்கு அவர் வந்தபோது பைக் தடுமாறி கீழே விழுந்தது. அப்போது நிவேதாவும் உடலும் கீழே விழுந்துள்ளது. இதனை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே முனியப்பனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் முனியப்பனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான 9 மாதத்தில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com