காதலி பிரிவு எதிரொலி: வளர்த்த பாம்பை கடிக்கவிட்டு மரணம் அடைந்த காதலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
காதலி பிரிந்ததால் பலர் பல்வேறு வகையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் காதல் தோல்வியால், தான் வீட்டில் வளர்த்து வந்த பாம்பை கடிக்கவிட்டு மரணம் அடைந்த காதலர் ஒருவரை பற்றி கேள்விப்பட்டதுண்டா?
ரஷ்யாவை சேர்ந்த அர்சன் என்பவர் பாம்பு, பூனை உள்பட பல உயிரினங்களை வீட்டில் வளர்த்து வந்து அதுகுறித்து வீடியோவை யூடியூபில் அப்லோடு செய்து வருபவர். இவருடைய சேனலுக்கு பல லட்சம் ஃபாலோயர்கள் உண்டு.
இந்த நிலையில் அர்சன், கேத்ரினா என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரின் வாழ்க்கையும் சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென ஒருநாள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அர்சன், தனது மனைவி கேத்ரினாவை அடித்துவிடுகிறார். இதனால் மனம் நொந்த கேத்ரினா, அர்சனை பிரிய முடிவு செய்கிறார். தனியாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கியது மட்டுமின்றி இன்னொருவருடன் வாழவும் முடிவு செய்கிறார்.
தனது காதல் மனைவி தன்னை விட்டு பிரிந்த சோகத்தில் இருந்த அர்சன், அவர் வேறொருவரிடம் வாழ்ந்து வருவதை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முடிவு செய்கிறார். தனது யூடியூப் சேனலின் நேரலையில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் தான் வளர்த்து வந்த கொடிய விஷமுள்ள பிளாக் மாம்போ என்ற பாம்பை கடிக்கவிட்டு சிறிது நேரத்தில் மரணம் அடைகிறார். மரணத்திற்கு முன் நேரலையில் பார்வையாளர்களுக்கு கேத்ரின் செல்போன் எண்ணை கொடுத்து 'இப்போதாவது கேத்ரினை என்னை வந்து பார்க்க சொல்லுங்கள்' என்று கூறுகிறார். இந்த சம்பவம் நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தவர்களை அதிர செய்தது.
தற்போது அர்சனின் கடைசி ஆசைப்படி கேத்ரின், அர்சனின் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அர்சன் செய்ததை தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments