உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொலை செய்த பேராசிரியர்! திடுக்கிடும் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் பெல்லார்மின் என்பவர் தனது மனைவி திவ்யாவை உப்புமாவில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் பெல்லார்மின் - திவ்யா திருமணம் நடந்த நிலையில் திருமணமான சில வாரங்களிலேயே தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அதனால் விவாகரத்து பெற்று சென்றுவிடுமாறும் மனைவி திவ்யாவை பெல்லார்மின் மிரட்டியுள்ளார். ஆனால் அதற்கு திவ்யா ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று திவ்யாவுக்கு கணவர் பெல்லார்மின் உப்புமா வாங்கி கொடுத்துள்ளார். அந்த உணவில் விஷம் கலந்ததை அறியாத திவ்யா, தான் செல்லமாக வளர்த்து வரும் நாய்க்கு சிறிது கொடுத்துவிட்டு பின் தானும் சாப்பிட்டுள்ளார். உப்புமாவை சாப்பிட்ட நாய் திடீரென இறந்துவிட, அப்போதுதான் அவருக்கு உப்புமாவில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். ஆம்புலன்ஸ் உடனடியாக வந்து மயங்கியிருந்த திவ்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த திவ்யா, தான் சாப்பிட்ட உப்புமாவில் விஷம் கலந்திருப்பதை கூறிவிட்டு பின் பரிதாபமாக மரணம் அடைந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உப்புமாவில் விஷம் கலந்த கணவர் பெல்லார்மின் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவருடைய பெற்றோரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments