மூன்று வருடங்களுக்கு முன் காணாமல் போன மனைவி: சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் திருப்பம்

  • IndiaGlitz, [Monday,January 13 2020]

புதுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி கடந்த மூன்று வருடங்களுக்கு முன் காணாமல் போன நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தற்போது திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் சரண்யா என்பவருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் ஆகியது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சரண்யா திடீரென காணாமல் போனதாக சரண்யாவின் பெற்றோர் மற்றும் கணவர் ரமேஷ் ஆகியோர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து சரண்யாவின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிசிஐடி போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் கணவர் ரமேஷ் கொடுத்த தகவல் சந்தேகம் ஏற்படும் வகையில் இருந்ததால் அவரை துருவித் துருவி விசாரித்தனர். இதில் ஒரு கட்டத்தில் அவர் தனது மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மனைவி நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அவரை கொலை செய்ய தனது நண்பர்களிடம் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து கொலை செய்யுமாறு கூறியதாகவும் இதனையடுத்து அவர்கள் சரண்யாவை கொலை செய்து ஒரு பாழடைந்த கிணற்றில் பிணத்தை வீசி விட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சரண்யாவின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சந்தேகம் காரணமாக மனைவியை கணவரே கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

விராத் கோஹ்லிக்கு போட்டியாக கிரிக்கெட்டில் களமிறங்கிய அனுஷ்கா ஷர்மா!

https://tamil.news18.com/news/sports/anushka-sharma-shoots-for-jhulan-goswami-biopic-in-eden-gardens-ra-243193.html

'திரெளபதி' பட இயக்குனருக்கு அஜித் வாழ்த்து தெரிவித்தாரா? பெரும் பரபரப்பு

சமீபத்தில் வெளியான 'திரெளபதி' பட ட்ரெய்லர் எந்த அளவு சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை

CAA - க்கு விவாதம் கட்டாயம் தேவை.. NRC நாட்டிற்கு தேவையே இல்லை..! நிதிஷ் குமார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை என்ற அவர், அதனை மாநிலத்தில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உறுதியாக கூறினார். 

விசாவை தவறவிட்ட இந்திய மாணவி.. தேடி கண்டுபிடித்து ஒப்படைத்த பாகிஸ்தான் ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு..!

துபாயில் யு.கே. மாணவர் விசாவை இந்தியப் பெண் காரில் தவறவிட்டார். அவரைத் தேடிச் சென்று விசாவை ஒப்படைத்த பாகிஸ்தான் ஓட்டுனருக்குப் பாராட்டுகள் குவிந்தன.

பிரதமர் மோடியின் CAA கருத்துக்கு பதில் கூற முடியாது.. நாங்கள் அரசியல் மற்றும் மதச்சார்பற்றவர்கள் - ராமகிருஷ்ண மடம்..!

'பிரதமரின் பேச்சு குறித்து நாங்கள் கருத்தேதும் தெரிவிக்க முடியாது. நாங்கள் முற்றிலும் அரசியலற்ற அமைப்பு. இங்கு அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்'"