ஆன்லைனில் சயனைடு வாங்கி மனைவியை கொலை செய்த பேங்க் மேனேஜர்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,February 04 2020]

மனைவி வரதட்சணை வாங்கி வரவில்லை என்பதற்காக சயனைடு மாத்திரை கொடுத்து கணவரே கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மதனபள்ளி என்ற பகுதியில் பேங்க் மேனேஜராக வேலை செய்துவரும் ரவி சைதன்யா என்பவருக்கும் ஆமினி என்ற பெண்ணுகும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்காக பெண் வீட்டார் ரவிக்கு 15 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு ஏக்கர் நிலம் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஆம்னியின் சகோதரிக்கு திருமணம் நடந்தபோது ஆமினியை விட அவரது சகோதரிக்கு அதிக வரதட்சணை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவி சைதன்யா தனது மனைவியிடம் வரதட்சணை வாங்கி வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்துள்ளது.

இந்த நிலையில் திடீரென ஆம்னி பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு ரவி சைதன்யா தகவல் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் போலீசாரிடம் இதுகுறித்து புகார் கொடுத்தனர் இந்த நிலையில் ஆமினியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆம்னி வழுக்கி விழுந்ததால் மரணம் அடையவில்லை இல்லை என்றும், அவருக்கு சயனைடு கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்தது.

இதனை அடுத்து ஆம்னி கணவர் ரவிசைதன்யாவுடன் போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது ஆன்லைனில் சயனைடு வாங்கி அதை சத்து மாத்திரை என ஏமாற்றி மனைவிக்கும் கொடுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதன்பின்னர் ரவியை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வரதட்சணைக்காக கட்டிய மனைவியை சயனைடு கொடுத்து கொலை செய்த கணவனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

சமூக விரோதிகளை அடையாளம் காட்டுங்கள்.. ரஜினிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் சம்மன்..!

அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

பிரபல தமிழ் நடிகையின் மெழுகுச்சிலை: நாளை சிங்கப்பூரில் திறப்பு விழா!

சிங்கப்பூரில் 'மேடம் துசாட்ஸ்' என்றா அருங்காட்சியகத்தில் உலகின் முக்கிய நபர்களின் மெழுகுச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாத்மா காந்தி,

மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனை: 4 உயிர்கள் பலியான பரிதாபம்!

மாமியார் மருமகள் இடையே கோலம் போடுவதில் ஏற்பட்ட சிறு சண்டை காரணமாக நான்கு உயிர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் ராணிப்பேட்டை அருகே நடந்துள்ளது

நடிகர் யோகிபாபுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் 'காக்டெயில்' என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த போஸ்டருக்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது தெரிந்ததே

எல்.ஐ.சி பங்குகள் விற்கப்படுவது சாதாரண விஷயமல்ல.. மக்களின் பணத்தில் கை வைக்கிறது இந்த அரசு..! விவரிக்கும் ஊழியர்கள்.

"எங்களுக்குப் பிரச்னை வந்துவிடும் என்பது போல சொல்லப்படுகிறது. எங்களுக்கு எப்படியும் சம்பளம் வரத்தான் போகிறது. ஆனால், மக்கள் இந்த நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிதைந்துவிடும்".