மது போதைக்காக மனைவியை நண்பனுக்கு விருந்தளித்த கணவன்: மகளையும் சீண்டியதால் கைது!

  • IndiaGlitz, [Tuesday,June 30 2020]

மதுபோதைக்கு நண்பனை அடிமைப்படுத்தி நண்பனின் மனைவியை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த ஒருவர், நண்பனின் மகளையும் சில்மிஷம் செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சியை சேர்ந்த தினேஷ் என்பவரும், ஃபாரூக் என்பவரும் கல்லூரி காலம் முதலே நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில் இஸ்லாமிய பெண் ஒருவரை தினேஷ் காதலித்துள்ளார். இதனை அடுத்து தினேஷ்க்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் நண்பர் ஃபாரூக் திருமணம் செய்து வைத்துள்ளார். அதுமட்டுமின்றி அவ்வப்போது தினேஷ் வீட்டிற்குச் சென்று புனிதநீர் தெளித்து சடங்குகளையும் ஃபாரூக் செய்து வந்ததாக தெரிகிறது

ஆனால் ஃபாரூக் தெளித்த புனித நீரில் மயக்க மருந்து கலந்து நண்பரின் மனைவிக்கு கொடுத்து அவரை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் ஃபாரூக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஃபாரூக் செய்த வன்கொடுமையை கணவரிடமும் அவருடைய தங்கையிடமும் தினேஷ் மனைவி கூறியுள்ளார். ஆனால் நண்பன் கொடுத்த மதுவுக்கு அடிமையான தினேஷ், மனைவி கூறியதை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. தினேஷ் சகோதரியும் ஃபாரூக் கூறியபடி நடந்துகொள் என கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவந்த ஃபாரூக், தனது மகள் மீதும் சில்மிஷம் செய்ததைப் பார்த்து தினேஷ் மனைவி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காவல்துறையினர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து ஃபாரூக்கை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தினேஷின் சகோதரி மற்றும் ஃபாரூக் மனைவி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்

போதைக்காக மனைவியை நண்பருக்கு விருந்தாக்கிய கணவர், அந்த நண்பர் அவருடைய மகள் மீதும் கை வைத்ததால் சிக்கிக் கொண்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த 2வது மனைவி: ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்

திருச்சியை சேர்ந்த ஒருவர் இரண்டு ஊர்களில் இரண்டு மனைவிகள் வைத்து வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் இரண்டாவது மனைவி ஏற்பாடு செய்த கூலிப்படையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்

வந்தாச்சு... இந்தியாவின் கொரோனா தடுப்பூசி: மனிதர்களுக்கு சோதனை செய்து பார்க்க ICMR ஒப்புதல்!!!

தற்போது, உலக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி குறித்த செய்திகளைத்தான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தூத்துக்குடி டிஎஸ்பி, ஏடிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: நீதிமன்றத்தின் அதிரடியால் பரபரப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பாக விசாரணை செய்த மாஜிஸ்திரேட் ஒருவரை ஒருமையில் மரியாதைக்குரிய வகையில் பேசியதாக  சாத்தான்குளம் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மீது புகார் எழுந்துள்ளது.

அரசியல்வாதிகளிடம் பவ்யம், சாமானிய மக்களிடம் அராஜகம்: சாத்தன்குளம் குறித்து பிரபல நடிகரின் நீண்ட பதிவு

சாத்தான்குளம், தந்தை-மகன் லாக்கப் மரணம் குறித்து ஒருசில நடிகர்கள் தவிர கிட்டத்தட்ட அனைத்து கோலிவுட் திரையுலகினர்களும் தங்களுடைய ஆவேசமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்

டிக்டாக், ஹலோ உள்பட 59 செயலிகளுக்கு தடை: இந்தியா அதிரடி உத்தரவு

டிக் டாக், ஹலோ ஆப் உள்பட சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது