திருமணமான 4வது நாளே வாந்தி எடுத்த மணப்பெண்: 2 மாத கர்ப்பம் என தெரிந்ததால் மாப்பிள்ளை அதிர்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,December 11 2019]

திருமணம் ஆன நான்காவது நாளே தனது புது மனைவி இரண்டு மாத கர்ப்பம் எனத் தெரிந்து வாலிபர் ஒருவர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பொள்ளாச்சி அருகே நடந்துள்ளது

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு இளைஞருக்கு நீண்ட நாள் திருமணம் ஆகாததால் புரோக்கர் ஒருவர் மூலம் பெண் பார்த்து அந்தப் பெண்ணுடன் திருமண செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பெண்ணுக்கு 27 வயது ஆகிறது என்றாலும் மாப்பிள்ளையே மணப்பெண்ணுக்கு நகைகள் மற்றும் ரொக்கம் கொடுத்து திருமணம் செய்ய முன்வந்தார்

இதனை அடுத்து சமீபத்தில் இந்த திருமணம் உற்றார் உறவினர்களின் ஆசியுடன் நடந்தது. இந்த நிலையில் புது மனைவியுடன் ஊட்டி சென்று ஹனிமூன் கொண்டாடி விட்டு திரும்பி வந்த மாப்பிள்ளைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. புதுமணப் பெண் திடீரென வாந்தி எடுக்க இது குறித்து மருத்துவரிடம் பரிசோதித்தபோது 2மாத கர்ப்பம் எனத் தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் தனது மனைவியிடம் இது குறித்து கேட்க அவர் எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்தார். இந்த நிலையில் இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் திருமணமாகி நான்கு நாட்கள் தான் ஆகிறது, ஆனால் அதற்குள் தனது மனைவி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை அவர் ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்திருந்தார்

இது குறித்து விசாரணை செய்ய மணப்பெண் குடும்பத்தினரை போலீசார் அழைத்தனர். ஆனால் மணப்பெண்ணின் குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டதாகவும் இளைஞருக்கு பெண் பார்த்துக் கொடுத்த புரோக்கரும் தலைமறைவாகி விட்டதாகவும் அவர்களை போலீஸ் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. நீண்டநாள் திருமணமாகாத விரக்தியில் இருந்த இளைஞர் திருமணமாகியும் தற்போது அதைவிட பெரிய விரக்தியில் இருப்பது பரிதாபத்திற்குரியதாக கருதப்படுகிறது.

More News

"வரணும்..பழைய பன்னீர் செல்வமா வரணும்" STR ரசிகர்கள் பகிரும் வீடியோ

சிம்பு குத்துச்சண்டை பயிற்சி பெறுவது போன்ற வீடியோ ஒன்று அவரது ரசிகர்களால் வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது...

வெங்காயம் இறக்குமதி பண்ணியாச்சு..ஆனால் பருப்பு விலை உயர்ந்திருச்சே..!

வெங்காயத்தைத் தொடர்ந்து பருப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து பருப்பு வரத்து குறைவு காரணமாக வரலாறு காணாத வகையில் பருப்பு விலைகள் உயர்ந்துள்ளன

கமல்ஹாசனை சந்தித்த பிரபல மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர்!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 தொடரில் இந்தியாவும், 2-வது டி20

ரஜினிகாந்த்-அஜித் சந்திப்பா? பரபரப்பில் தமிழக அரசியல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 168' படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்பதை ஏற்கனவேயும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம். 

'தலைவர் 168' படத்தின் அடுத்த அதிரடி தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 168' திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் கடந்த இரண்டு நாட்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியானது