கணவர் இறந்தது தெரியாமலேயே அழகான குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண்!

  • IndiaGlitz, [Wednesday,June 10 2020]

துபாயில் கணவர் இறந்தது தெரியாமலேயே அழகான குழந்தையைப் பெற்றெடுத்து கணவரிடம் காண்பிப்பதற்காக இளம்பெண் ஒருவர் எதிர்பார்த்து காத்திருக்கும் சோகமான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த நிதின் சந்திரன் என்பவரும் அவருடைய மனைவி அதிரா என்பவரும் துபாயில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் அதிரா கர்ப்பம் ஆனதை அடுத்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என சிறப்பு அனுமதி பெற்று கேரளாவுக்கு திரும்பினார். நிதின் சந்திரன் மட்டும் துபாயில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அதிராவுக்கு அழகான குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாளே அவருடைய கணவர் நிதின் சந்திரா மாரடைப்பு காரணமாக துபாயில் திடீரென மரணம் அடைந்துவிட்டதாக வெளிவந்த தகவல் அதிரா குடும்பத்தினர்களை அதிர வைத்தது. இருப்பினும் கணவரின் மரணம் குறித்து அதிராவிடம் தெரிவிக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து கணவர் மறைந்ததை அதிராவிடம் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் உள்ளனர். இந்த நிலையில் அழகிய குழந்தையை பெற்றெடுத்த அதிரா தனது கணவரிடம் அந்தக் குழந்தையைக் காண்பிப்பதற்காக மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்.

இந்த நிலையில் நிதின் சந்திரா கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடைய உடலை கேரளாவுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவருடைய உடல் கேரளாவுக்கு வந்த பின்னரே அதிராவிடம் அவரது மரணம் குறித்து தெரிவிக்க அவரது உறவினர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கணவர் இறந்த அடுத்த நாளே அழகிய குழந்தையை பெற்றெடுத்து கணவரிடம் காண்பிக்க எதிர்பார்த்து காத்திருக்கும் அதிராவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்து இருக்கிறது என்பதும் அவரை எப்படி தேற்றுவது என்று என்று புரியாமல் அவரது குடும்பத்தினர் திகைப்பில் உள்ளனர் என்பதும் அனைவரையும் சோகமாய் மாற்றியுள்ளது.

More News

1000 புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 6 விமானங்கள் ஏற்பாடு செய்த சூப்பர் ஸ்டார் நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

வழக்கம்போல் இன்றும் புதிய உச்சம்: இன்றைய தமிழகம், சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 1000, 1500 என்று இருந்த கொரோனாவின் பாதிப்பு தற்போது

தமிழக முதல்வரை சந்திக்க திட்டமிட்ட போனிகபூர்: அஜித் சொன்னது என்ன?

தமிழக முதல்வரை சந்திக்க தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் அஜித் சொன்னதால் அந்த திட்டத்தை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கொரோனாவால் உயிரிழந்த தொண்டருக்கு கமல் இரங்கல்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருவதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவே இறுதி அல்ல: தீவிர கொள்ளை நோய்களும் வரப்போகிறது!!! பீதியைக் கிளப்பும் விஞ்ஞானிகள்!!!

இதுவரை மனிதர்களை பாதித்த கொள்ளை நோய், பெருந்தொற்று போன்றவை வன விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது