மனைவி ஆபாச நடிகை மாதிரியே நடந்துகணும்? வற்புறுத்திய கணவனுக்கு நடந்த சோகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் ஆபாச பட நடிகை மாதிரியே தன்னை உடை உடுத்தச் சொல்கிறார் மேலும் ஆபாச படங்களை பார்க்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார் என்று தனது கணவன் மீது இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிதிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
டெல்லியிலுள்ள ரோஹ்தாஷ் நகரத்தில் வசித்துவரும் 30 வயதான இளம்பெண் ஒருவர் என்னுடைய கணவர் ஆபாசமாக உடையணிந்துக் கொள்ள சொல்லி வற்புறுத்துகிறார். மேலும் அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்க்கச் சொல்கிறார் என்று கூறி ஷாஹ்தரா காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2020 இல் திருமணம் செய்துகொண்ட நிலையில் மூன்றே நாட்களில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அந்த நாட்களில் கூட எனது கணவர் உடலுறவு கொள்ள வற்புறுத்தினார். மேலும் பலமுறை உடல் ரீதியாக என்னை துஷ்பிரயோகம் செய்தார். மேலும் மதுப்பழக்கம், புகைப்பழக்கம் கொண்ட அவர் ஆபாசப் படங்களைப் பார்க்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாகவும் இளம்பெண் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இதுகுறித்து பேசிய அந்தப் பெண் திருமணத்தின்போது 3 லட்சம் வரதட்சணை கொடுத்திருக்கும் நிலையில் பின்னர் தவணை அடிப்படையில் மீதி பணத்தை வாங்கிக் கொள்ள ஒப்புக்கொண்டனர். ஆனால் தொடர்ந்து எனக்கு வரதட்சணை கொடுமை நடந்து வருகிறது என்று கூறியிருக்கும் நிலையில் அந்த கணவர் மீது பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
இதனால் இந்திய தண்டனை பிரிவு 498 ஏ ஒரு பெண்ணின் கணவன் அல்லது கணவனின் உறவினர் கொடுமைப்படுத்துதல், 406 குற்றவியல் நம்பிக்கை மீறல், 377 இயற்கைக்கு மாறான குற்றம் மற்றும் 34 பொது நோக்கம் ஆகியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments