சென்னையில் நீதிபதி கண்முன் மனைவியை கத்தியால் குத்திய கணவன்!
- IndiaGlitz, [Tuesday,March 19 2019]
சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வருவதுண்டு. எனவே குடும்ப நல நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்படும்.
இந்த நிலையில் இன்று ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த சரவணன், அவரது மனைவி வரலட்சுமி ஆகியோர் தங்களுக்குள் ஏற்பட்ட ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர், அப்போது நீதிபதி கலைவாணன் அவர்களின் பிரச்சனையை கேட்டுக்கொண்டிருந்தபோது திடீரென சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி வரலட்சுமியை சரமாரியாக குத்தினார்.
இந்த சம்பவத்தால் நீதிபதி உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனைடுத்து சரவணனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கத்திக்குத்தால் காயம் அடைந்த வரலட்சுமி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.