ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய கணவன் - மனைவி! சென்னையில் பரிதாபம்

  • IndiaGlitz, [Saturday,June 29 2019]

சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் புடவை ஒன்றில் மனைவி தூக்கில் தொங்கி இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் அதே புடவையில் தூக்கில் தொங்கிய சோக நிகழ்ச்சி அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த 38 வயது மதன் என்பவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக மதனுக்கும் கவுசல்யாவுக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் சண்டை வர உடனே மனம் வெறுத்த கவுசல்யா புடவையை மின்விசிறியில் மாட்டி தூக்கில் தொங்கினார். இதை கண்டு கதறியழுத மதன், புடவையின் இன்னொரு பக்கத்தில் தானும் தூக்கில் மரணம் அடைந்தார்

பள்ளி சென்றிருந்த இவர்களின் குழந்தைகள் வீட்டிற்கு வந்தபோது அப்பா, அம்மா இருவரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் செங்குன்றம் போலீசார் உடனே சம்பவம் இடத்திற்கு வந்து இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் அப்பா, அம்மா இருவரையும் இழந்த அந்த பிஞ்சு குழந்தைகளின் கண்ணீர் அனைவரையும் கலங்க வைத்துள்ளது