ஒரே நாளில் வெளியாகும் கணவன் - மனைவி நட்சத்திரங்களின் படங்கள்: ரசிகர்கள் வாழ்த்து!
- IndiaGlitz, [Wednesday,September 07 2022]
திரையுலகில் நட்சத்திரமாக இருக்கும் கணவன்-மனைவியின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா என்பதும் அவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நாகார்ஜுனா தற்போதும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நிலையில் திருமணத்திற்கு பின் நடிக்காமல் இருந்த அமலா நீண்ட இடைவெளிக்கு பின் ’கணம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அமலா நடித்த ’கணம்’ திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவரது கணவர் நாகார்ஜூனா நடித்த ‘பிரம்மஸ்திரா’ என்ற திரைப்படம் அதே நாளில் வெளியாக இருக்கிறது. நட்சத்திர தம்பதிகளான நாகார்ஜுனா மற்றும் அமலா ஆகிய இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஒரே நாளில் தனது பெற்றோர் படங்கள் ரிலீஸாக இருப்பதற்கு நடிகர் அகில் தனது மகிழ்ச்சியை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.