தாடி பாலாஜி - நித்யா போல் இன்னொரு கணவன் - மனைவியா? களை கட்டப்போகும் பிக்பாஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மற்றும் நித்யா தம்பதிகள் ஒரே சீசனில் கலந்து கொண்டார்கள் என்பதும் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில் இருவரையும் கமல்ஹாசன் சமாதானப்படுத்தி இருவரையும் ஒன்று சேர்த்தார் என்பதையும் பார்த்தோம்.
அந்த வகையில் ஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளராக ரக்சிதா இருக்கும் நிலையில் அவரது கணவர் தினேஷ் விரைவில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இது உண்மையாக இருந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி வேற லெவலில் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரக்சிதா மற்றும் அவரது கணவர் தினேஷ் ஆகிய இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டால் அவர்களுக்குள் ஒரு புரிதல் ஏற்பட்டு மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தாடி பாலாஜி மற்றும் நித்யாவை கமல்ஹாசன் சமாதானப்படுத்தி ஒன்று சேர்த்தது போல் ரக்சிதா-தினேஷ் இடையே இருக்கும் கருத்துவேறுபாட்டையும் கமல்ஹாசன் தீர்த்து வைத்து அவர்கள் இருவரும் ஒற்றுமையாக வாழ வைக்க முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் ரக்சிதாவை ஒரு தலையாக காதலித்து வரும் ராபர்ட் மாஸ்டருக்கு தினேஷின் வருகை நிச்சயம் சிக்கலாக தான் இருக்கும். ஏற்கனவே ராபர்ட் மாஸ்டர் தனது மனைவி ரக்சிதாவுடன் நடந்து கொள்வது குறித்து காரசாரமாக தனது சமூக வலைத்தளத்தில் தினேஷ் பதிவு செய்து வரும் நிலையில் அவர் வைல்ட்கார்ட் போட்டியாளராக உள்ளே சென்றால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஒருவேளை வைல்ட்கார்ட் போட்டியாளராக இல்லாமல் உறவினர்கள் வருகை தரும் டாஸ்க்கில் தினேஷ் வந்தால் கூட அவர் ராபர்ட் இடம் எப்படி நடந்து கொள்வார் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments