close
Choose your channels

உடலுறவின் போது படுக்கையில், ஆண் தன் துணையிடம் எதிர்பார்ப்பது என்ன.....?

Thursday, August 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உடலுறவில் இங்கு பல பெண்களுக்கு தன்னுடைய துணை குறித்த சந்தேகம் இருக்கும். அவர் என்ன நினைப்பார்...? தன் துணையிடம் எப்படி நடந்து கொள்வது...? அவருக்கு பிடிக்குமா....? என்ற தொடர் கேள்விகள் திருமணத்திற்கு பின்பு எழுந்துகொண்டே இருக்கும். ஆண்கள் அந்த சமயத்தில், தான் இருக்கும் Mood -ஐ பொறுத்து தான், படுக்கையறையில் ரியாக்ட் செய்வார்கள். பெண்கள் எப்படி ஆண்களிடம் எதிர்பார்க்கிறார்களோ, அதேபோல் தான் ஆண்களும் பெண்களிடம் எதிர்பார்ப்பார்கள். ஆண்களை அதிகபட்ச ஆசைக்கு அழைத்து செல்வது குறித்த டிப்ஸ்-களை இதில் பார்க்கலாம்.

பெண்களும் ஆதிக்கத்தை துவங்கலாம்.....!

படுக்கையறையில் ரொமேன்ஸை ஆண்கள் தான் பொதுவாகவே துவங்குவார்கள். ஆனால் எல்லா நேரங்களிலும் தாங்கள் வழிநடத்துவதை அவர்கள் விரும்புவதில்லை. தன்னுடைய துணையும் அதை துவங்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருப்பார்கள். குறிப்பாக உடலுறவு கொள்கையில் உங்களின் உணர்வுகளை அவர்கள் ரசிப்பார்கள். அதிகபட்ச உணர்வில் இருக்கும்போது, துணையின் Mood -ஐ ரசிக்கவும் செய்வார்கள். துணையின் உணர்வுகளை பார்த்து பரவசமாகும் பெண்கள், கணவனையும் பரவசப்படுத்துங்கள். பெண்கள் துணை விரும்புவதையும் செய்ய முயற்சி செய்யுங்கள்.

கணவரிடம் உள்ள ரகசியத்தை கண்டறியுங்கள்....!

திருமணமான சமயத்தில் கணவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை துணையால் கண்டுபிடிக்க முடியாது. சில நாட்களுக்கு பின், உடலுறவு நடந்தபின்பு அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். எதை நடத்துவதன் மூலம் அவர் சந்தோஷமடைகிறார் என்பதை அறிந்து, அதை செயல்படுத்துங்கள். நீங்கள் தொடரும் முறை அவருக்கு பிடித்துவிட்டால், அவரது முகத்தில் மகிழ்ச்சி வெளிப்படும். இதை புரிந்து கொண்ட நீங்கள் அந்த மூவ்-ஐ ஒவ்வொரு முறையும் தொடரலாம், இது கணவருக்கு அதிகபட்ச உணர்வையும், திருப்தியையும் தரும்.

உடலுறவின் நிலைகள்:

பெரும்பாலான ஆண்கள் தன்னுடைய துணையுடன் வெவ்வேறு நிலைகளிலே உடலுறவு வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அவர் நினைக்கும் முன்பு நீங்கள் அந்த நிலையில் அமர்ந்து அவரை உற்சாகப்படுத்தலாம். குறிப்பாக பெண்களின் அழைப்பு, ஆண்களின் உணர்வை தூண்டும் அளவில் இருக்கும். டாக்கி ஸ்டைல் என்ற உடலுறவு முறையே ஆண்கள் விரும்புவதால், துணையும் அதற்கு முயற்சிக்கலாம்.

பெண்கள் உணர்வுகளை தூண்ட வேண்டும்....!

பொதுவாக பெண்களின் கவர்ச்சிகரமான ஆடைகள் ஆண்களை மயக்க வைக்கும். உங்களின் துணையின் முன்பு லேசான ஆடைகளை நீங்கள் அணியலாம், டார்க் நிறத்திலும் உடல் பாகங்கள் தெரியும் அளவிற்கும் நீங்கள் உடை அணியலாம். இவை உறவிற்கு அழைக்கும் விதமாகவும், ஆண்களின் உணர்வை தூண்டிவிடவும் உதவுகிறது. கவர்ச்சியான உடைகள் அணிந்துகொண்டு உங்களுடைய துணை முன்பு நடமாடும் போது, அவரிடமிருந்து பாசிட்டிவான சமிக்கைகள் வரும். பெண்கள் கணவனின் எதிர்ப்பார்ப்புகளை அறிந்துகொண்டு, அவரின் தேவைகளை பூர்த்தி செய்வதும், துணை செய்யும் சிறிய விஷயங்களும் ஆண்களை வெகுவாக ஈர்க்கும், இந்த டிப்ஸ்கள் உங்களின் தாம்பத்திய வாழ்விற்கு உதவும் வகையில் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment