கணவர் கண் முன்னே இறந்த மனைவி.. சர்க்கஸ் சாகசத்தின் போது ஏற்பட்ட விபரீதம்..!

  • IndiaGlitz, [Thursday,April 20 2023]

சீனாவில் கணவன் மனைவி இருவரும் சர்க்கஸ் சாகசம் செய்து கொண்டிருந்த நிலையில் பெண் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அக்ரோபேட் என்ற அந்தரத்தில் சாகசம் செய்யும் நிகழ்ச்சிகள் சர்க்கஸில் நடப்பது உண்டு என்பதும் ஆனால் கீழே வலை வைத்து பாதுகாப்புடன் நடத்தப்படும் என்பதும் தெரிந்ததே. ஆனால் சீனாவில் உள்ள சர்க்கஸ் லைவ் ஷோவில் கணவன் மனைவி இருவரும் அந்தரத்தில் அக்ரோபேட் சர்க்கஸ் சாதனை செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

சீனாவில் சுஹொங்க் மவ்மவ் மற்றும் சன் மவ்மவ் என்ற கணவன் மனைவி இருவரும் அக்ரோபேட் சர்க்கஸ் சாகசங்களை செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த பெண் தனது கணவரின் கையை பிடிக்க தவறியதால் கீழே விழுந்தார். படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது போன்ற ஆபத்தான சர்க்கஸ் சாதனைகளை செய்யும் போது கீழே பாதுகாப்பு வலை வைக்க வேண்டும் என்று சீனாவின் ஊடகங்கள் இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அத்தியாவசிய பாதுகாப்பு மற்றும் அவசர நடவடிக்கைகள் எடுக்க தவறிய சர்க்கஸ் நிறுவனம் மீது சீன காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.