ஆட்டுக்குட்டியின் பசிக்காக ரூ.66,000ஐ இழந்த பரிதாப நபர்
- IndiaGlitz, [Wednesday,June 07 2017]
பொதுவாக ஒரு ஆட்டுக்குட்டியின் பசியை போக்க ரூ.50 அல்லது ரூ.100க்கு புல் வாங்கி போட்டாலே போதும். ஆனால் கான்பூரில் உள்ள ஒரு ஆட்டுக்குட்டியின் பசிக்கு ரூ.66000 ஆகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே சிலுப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த சர்வேஷ்குமார் என்பவர் தான் கட்டிகொண்டிருக்கும் வீட்டிற்கு செங்கல் வாங்க தனது பேண்ட் பாக்கெட் பையில் ரூ.60000 வைத்திருந்தார். ரூ.2000 நோட்டுக்களாக இருந்த இந்த பணம் வைத்திருந்த பேண்ட்டை கழட்டி வெட்ட வெளியில் ஒரு இடத்தில் தொங்கவிட்டு குளிக்க சென்றார்.
அந்த சமயத்தில் அவர் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டி பசியின் காரணமாக அவருடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை ருசித்து சாப்பிட்டுவிட்டது. குளித்துவிட்டு வந்து பார்த்த சர்வேஷ்குமார், கிட்டத்தட்ட பணம் முழுவதையும் ஆடு சாப்பிட்டுவிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஓரிரண்டு ரூ.2000 நோட்டு மட்டுமே அதுவும் மிகவும் கசங்கிய நிலையில் மீதமிருந்தது. ஆனாலும் அவர் வளர்த்த ஆட்டின் மீது கோபப்படவில்லை. பணம் போனால் போகட்டும், அதற்காக நான் ஆசையாய் வளர்த்த ஆட்டை வெறுக்க மாட்டேன்' என்று கூறியுள்ளார்.