விமான விபத்தில் 257 ராணுவ வீரர்கள் பலி: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
அல்ஜீரியா நாட்டில் நடந்த விமான விபத்து ஒன்றில் அதில் பயணம் செய்த 257 அல்ஜீரிய நாட்டு ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அல்ஜீரியாவில் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 257 ராணுவ வீரர்களுடன் பெளஃபாரிக் விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது. ஆனால் ரன்வேயை விட்டு கிளம்பிய ஒருசில நிமிடங்களில் திடீரென அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 257 ராணுவ வீரர்களும் பரிதாபமாக பலியாகினர்.
இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணைக்கு அல்ஜீரியா அரசு உத்தரவிட்டிருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து அல்ஜீரியா நாட்டின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமது அகூர் கூறியபோது, 'விபத்துக்குள்ளான விமானத்தில் முழுக்கவே ராணுவ வீரர்கள் பயணம் செய்ததாகவும், விபத்தில் மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் சரியான எண்ணிக்கை எவ்வளவு என்று இப்போது கூற முடியாது என்றும் கூறினார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்./
Dozens reportedly killed after military plane crashes into a residential area in #Algeria pic.twitter.com/9F59j76kr9
— Press TV (@PressTV) April 11, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments