நடிகை அனுஷ்கா மீது மனித உரிமை கமிஷனிடம் புகார்: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Sunday,May 24 2020]

பிரபல பாலிவுட் நடிகையும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி மனைவியுமான அனுஷ்கா ஷர்மா மீது மனித உரிமை கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வந்தார். அவர் தயாரித்த ‘என்.எச்.19’, ‘ஃபில்லாயூரி’, பாரி’ போன்ற பாலிவுட் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது அவர் ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஒரு வெப் சீரியல் ஒன்றை தயாரித்து வருகிறார். ‘Pataal Lok’ என்ற டைட்டில் கொண்ட இந்த வெப்சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த சீரியலின் ஒரு பகுதியில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களை அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை அடுத்து அந்த குறிப்பிட்ட இனத்தவர்களின் சங்க நிர்வாகிகள் தேசிய மனித உரிமை கமிஷனிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

இந்த சீரியலில் வரும் ஒரு சில காட்சிகள் தங்கள் இனத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் இதனால் தாங்கள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த சீரியல் தயாரிப்பாளர் அனுஷ்கா சர்மா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து தேசிய மனித உரிமை கமிஷன் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

தனக்கு நெருக்கமான முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய மாநில அரசுகள் மீது பாரபட்சமின்றி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்: கவுதம்மேனனுக்கு தமிழ் இயக்குனர் கோரிக்கை

பிரபல இயக்குனர் கவுதம்மேனன் சமீபத்தில் இயக்கிய 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் பெரும்பாலானோரால் வரவேற்பை பெற்று இணையதளங்களில் டிரண்ட் ஆகி வருகிறது

4 மண்டலங்களில் மட்டும் 5467, 2000ஐ நெருங்கிய ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

வெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி: ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இருவரும் மீண்டும் இணைந்த திரைப்படம் 'ஆடுகளம்'.

பிரதமர் மோடிக்காக அஜித், விஜய் நாயகி தயாரித்த பாடல்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு சில தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸை முடிந்த அளவு கட்டுப்படுத்துகிறது.