அஜித்தின் 'வலிமை' படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஹூமா குரேஷி!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் இந்திய திரையுலகமே மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல் முறையாக அஜித் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் தமிழ் டிரைலர் ஏற்கனவே வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் தற்போது ‘வலிமை’ ஹிந்தி பதிப்பின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ‘வலிமை’ படத்தின் நாயகி ஹூமா குரேஷி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளை சந்திக்க தயாராக இருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் போலவே ஹிந்தியிலும் ‘வலிமை’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindi Trailer out at 6:30 pm today … Action speaks louder than words #Valimai #AjithKumar @BoneyKapoor pic.twitter.com/WnEiFVjbuF
— Huma S Qureshi (@humasqureshi) February 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments