'காலா' நாயகிக்கு ரஜினி வீட்டில் இருந்து வந்த உணவு

  • IndiaGlitz, [Monday,March 19 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் நாயகி ஹூமா குரேஷிக்கு ரஜினி விட்டில் இருந்து உணவு வந்த தகவலை அவர் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

காலா' படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், 'முதல் நாள் படப்பிடிப்பில் கேமிரா டெஸ்ட் மற்றும் ஒருசில புகைப்படங்களுக்கு ரஜினியுடன் போஸ் கொடுத்தேன். அவரை போன்ற ஒரு இனிமையான, எளிமையான , ஜெண்டில்மேனை நான் பார்த்ததே இல்லை அவர் வீட்டில் இருந்து வந்த உணவு வகைகளை நான் மிகவும் விரும்பி சாப்பிட்டேன்' என்று கூறினார்.

மேலும் சென்னை படப்பிடிப்பின்போது நான் என்னுடைய வீட்டில் இருப்பதை போன்றே உணர்ந்தேன். இந்த ஊரின் நாகரீகம், பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. என்னை அனைவரும் இன்முகத்துடன் வரவேற்றது எனக்கு ஆச்சரியத்தை தந்தது' என்று கூறியுள்ளார்.

மேலும் 'காலா' படத்தின் டிரைலர் ரிலீசுக்கு பின்னர் கோலிவுட்டில் இருந்து பட வாய்ப்புகள் அதிகம் வருவதாகவும், இதனால் சென்னையில் தங்கி படப்பிடிப்புக்கு செல்வதற்கு வசதியாக சென்னையில் வீடு ஒன்று வாங்க முடிவு செய்திருப்பதாகவும் தனது பேட்டியில் கூறியுள்ளார்,.