700% மின்கட்டணம் அதிகம்: 'காலா' நாயகியின் ஷாக்கிங் தகவல்

ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மின்சார ரீடிங் எடுக்கப்படாததால் தற்போது மொத்தமாக நான்கு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார ரீடிங் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் பலர் குறைகூறி வருகின்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தங்கள் வீட்டிற்கு பல மடங்கு மின் கட்டணம் வந்துள்ளதாக தங்களுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நடிகர் பிரசன்னா, நடிகை டாப்சி, நடிகை கார்த்திகா நாயர் உள்பட ஒருசிலர் இது குறித்து தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவரான ஹூமா குரேஷி தன்னுடைய வீட்டிற்கு கடந்த மாதத்தைவிட இந்த மாதம் என 700 சதவீதம் அதிகமாக மின்கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எந்த அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் கடந்த மாதம் தன்னுடைய வீட்டிற்கு 6000 ரூபாய் மட்டுமே மின்கட்டணம் வந்ததாகவும் ஆனால் இந்த முறை 50,000 ரூபாய் வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹூமா குரேஷின் குற்றச்சாட்டு குறித்து மகாராஷ்டிர மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

ஓடிடியில் ராகவா லாரன்ஸின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 4000ஐ நெருங்கியுள்ள இன்றும் 4000க்கு மிக அருகே நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு பிடிவாரண்ட்: பரபரப்பு தகவல்

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபருக்கே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சூர்யா அறிக்கையை முதல்வருக்கு டேக் செய்த இயக்குனர்!

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கோலிவுட் திரையுலகில் உள்ள கிட்டத்தட்ட அனைவருமே

துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பதவிகளில் இருப்பவர்கள் சிலரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது