விபிஎஃப் கட்டணம் திடீர் குறைப்பு: முடிவுக்கு வருகிறதா வேலைநிறுத்தம்
- IndiaGlitz, [Sunday,April 08 2018]
டிஜிட்டல் நிறுவனங்கள் விபிஎஃப் கட்டணத்தை முற்றிலும் நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலைநிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளை கைவசம் வைத்துள்ள கியூப் டிஜிட்டல் நிறுவனம் 18-23% மட்டுமே விபிஎஃப் கட்டணத்தை குறைக்க முன்வந்ததால் தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டம் தொடர்ந்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்னொரு டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனமான எரோக்ஸ் என்ற நிறுவனம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தில் இருந்து 50%க்கும் குறைவாக வசூலித்து கொள்ள ஒப்புக்கொண்டு தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது சர்வதேச அளவில் டிஜிட்டல் சேவைகளை வழங்கி வரும் இந்த ஏரோக்ஸ் நிறுவனம் தமிழகத்தில் தற்போது ஒருசில திரையரங்குகளுக்கு மட்டுமே சேவை செய்து வருகிறது. இந்த ஒப்பந்தம் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க்குகளுக்கும் குறைந்த கட்டணத்தை தனது சேவைவயை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதால் வேலைநிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.