கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்: காற்றில் பறக்கவிடப்பட்ட கொரோனா விதிமுறைகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளாவில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் குளிப்பது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் கொரோனா தொற்று மேலும் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது
12 ஆண்டுக்கு ஒருமுறை ஹரித்துவாரில் கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறும். இந்துக்களின் புனித நீராடல் நிகழ்வு சுமார் மூன்று மாதங்கள் நடைபெறும் இந்த நிகழ்வு தற்போது கொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிவராத்திரி, பவுர்ணமி ஆகிய நாட்களில் கங்கை நதியில் ஆயிரக்கணக்கான ஒரே நேரத்தில் கங்கையில் நீராடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக கும்பமேளாவில் பல்வேறு கெடுபிடிகள் இருந்தாலும் அந்த கெடுபிடிகளையும் மீறி பக்தர்கள் இந்த புனித நீராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்
குறிப்பாக கொரோனா விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு உள்ளதாகவும் கொரோனா தடுப்பு அதிகாரிகளின் முயற்சிகளையும் மீறி பல்லாயிரக்கணக்கானோர் முக கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும், கொரோனா விதிமுறைகளை மீறி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களில் நேற்று பட்டம் 694 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த இரண்டு நாட்களில் 1000 பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கும்பமேளா நிகழ்ச்சியில் கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வைத்திருப்பவர்களை மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் சாதுக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், மாஸ்க் அணியவும் வலியுறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது
ஏற்கனவே இந்தியாவில் நாள்தோறும் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற விசேஷ நிகழ்ச்சிகளால் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments