பத்து ரூபாய்க்கு 8 மணி நேரம் போதை! விளைவு தெரியாமல் பயன்படுத்தும் சிறுவர்கள்! கண்டுபிடிப்பது எப்படி?
Send us your feedback to audioarticles@vaarta.com
திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வசித்து வரும் பள்ளிக்கு செல்லாத சிறுவர்கள், சிறிய வயதிலேயே வேலைக்கு செல்லும் சிறுவர்கள், குப்பை பொறுக்கி வரும் சிறுவர்கள், மற்றும் இளைஞர்கள் பலர் புதுவிதமான கெமிக்கல் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையையே தொலைத்து விடும் அவல நிலை உருவாக்கியுள்ளது.
இந்த போதை பழக்கம் வடமாநில இளைஞர்களிடம் இருந்து, தமிழகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. பொதுவாக போதை என்றால், மது, கஞ்சா, மற்றும் விலை அதிகமான போதை பொருட்கள் ஆகியவற்றில் இருந்து தான் கிடைக்கும் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதையும் தாண்டி ஐந்து ரூபாய், பத்து ரூபாய்க்கு விற்கப்படும் செருப்பு மற்றும் பர்னிச்சர்கள் ஒட்ட பயன்படுத்தப்படும் சொல்யூஷனை தற்போது போதை பொருளாக எடுத்துக் கொள்கின்றனர் சில சிறுவர்கள்.
இதன் விலை குறைவு என்பதால், இதற்கு பலர் அடிமையாகியுள்ளனர். இந்த சொல்யூஷனை நேரடியாக மூக்கின் அருகே எடுத்து சென்று முகர்ந்தால், இதில் கலக்கப்பட்டுள்ள கெமிக்கல் நேரடியாக மூளைக்கு சென்று ஒரு வித போதையை உருவாக்குகிறது.
அதேபோல் ஒரு பிளாஸ்டிக் கவரில் சிறிதளவு சொல்யூஷன் ஊற்றி, அதை நன்கு ஊதி மூக்கிற்கு எடுத்து சென்று சுவாசித்தால் அதிக அளவு போதை தரும். இதன் தாக்கத்தால் பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்களும் சுமார் எட்டு மணி நேரம் போதையில் மிதக்கின்றனர்.
போதை குறைந்த பின்னரும் சொல்யூஷனை பாக்கெட்டிலேயே வைத்திருந்து, மீண்டும் தங்களை போதைக்கு தயார்படுத்தி கொள்கின்றனர்.
குறிப்பாக திருவள்ளூர் ரயில் நிலையம்,அருகே உள்ள சுடுகாடு பகுதியில் தான் ஏராளமானோர் அமர்ந்து இந்த போதையை அனுபவிக்கின்றனர். இதனால் இதுகுறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த போதையின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் தெரியாமல் இவர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் ஆபத்தான இந்த கெமிக்கல் போதையை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால், மூளை பாதிப்பு , ரத்தத்தில் கிருமிகள் கலப்பதால் மரணம், மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு, கை,கால் செயலிழக்கும் நிலை மற்றும் சித்த பிரம்மை ஆகியவற்றிற்கு தள்ளப்படுகின்றனர்.
இதனைப் பயன்படுத்துபவர்கள் மூக்கு மற்றும் வாயில் சிவந்தவாறு காணப்படும், அடிக்கடி சளி தொல்லையால் பாதிக்கப்படுவார்கள், அதிக கோபம் வரும், ஒரு நிலையில் கை கால் நடுக்கம் ஏற்படும், இதை வைத்து பெற்றோர் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கண்டுபிடிக்கலாம் என கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
மேலும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை கொடுப்பதால் விரைவில் இந்த போதையின் அடிமையிலிருந்து அவர்களை மீட்டுவிட முடியும் என தெரிவிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout