ஹுவாயின் புதிய பட்ஜெட் மொபைல்கள்.. அசத்தும் specifications..!
Send us your feedback to audioarticles@vaarta.com
டூய்ல்-சிம் Huawei P40 Lite E, EMUI 9.1 உடன் Android 9-ல் வெளிவந்திருக்கிறது. இது 6.39 இன்ச் (720 x 1,560) மெலிதான பெசல்களுடன் எல்சிடி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. போனில் ஆக்டா கோர் ஹவாய் கிரின் 810 SoC ஆண்ட்ராய்டு 9-ல் உள்ளது. Huawei P40 Lite E-யில் உள்ள GPU, Mali G51-MP4 ஆகும். இந்த போன் 4ஜிபி என்ற ஒரே ஒரு ரேம் வேரியண்டில் வருகிறது.
கேமராக்களைப் பற்றி பேசுகையில், Huawei P40 Lite E பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முதன்மையானது f/1.8 aperture உடன் 48 மெகாபிக்சல் சென்சார், இரண்டாம் நிலை f/2.4 aperture உடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார், மூன்றாவது 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார். முன்பக்கத்தில், ஹோல்-பஞ்சில் f/2.0 aperture உடன் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.
Huawei P40 Lite E, 64 ஜிபி-க்கு ஒரே ஒரு ஸ்டோரேஜ் வேரியண்ட் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி (512 ஜிபி வரை) விரிவாக்க முடியும். Huawei P40 Lite E-யின் இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11b/g/n support, Bluetooth v5.0, a 3.5mm headphone jack மற்றும் சார்ஜ் செய்ய Micro-USB port ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போனின் பின்புறத்திலும் கைரேகை ஸ்கேனர் உள்ளது.
பட்ஜெட் போனில் 10W சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. Huawei P40 Lite E 15,9.81x76.13x8.13மிமீ அளவு மற்றும் வெறும் 176 கிராம் எடை கொண்டதாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments