விஜய்யின் ரகசியத்தை தெரிந்தே ஆக வேண்டும்: ஹிருத்திக் ரோஷன்

  • IndiaGlitz, [Wednesday,March 04 2020]

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நேற்று சென்னைக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார். அப்போது அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தனக்கு தமிழில் விருப்பமுள்ள நடிகர் தளபதி விஜய் என்றும் அவருடைய எனர்ஜியான டான்ஸ் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் விஜய் இந்த அளவுக்கு எனர்ஜியாக டான்ஸ் ஆடுவதற்கு என்ன மாதிரியான டயட் திட்டங்களை வைத்துள்ளார் என்ற ரகசியத்தை தான் கண்டுபிடித்த ஆக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஒருவர் விஜய்யின் டான்ஸ் குறித்து பெருமையாக பேசியதை விஜய் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர்.