காதலிப்பது உண்மையா? தீயாய் பரவும் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்துவரும் ஹிருத்திக் ரோஷன், நடிகையும் பாடகியுமான சபா ஆசாத்தை காதலித்து வருகிறார் என்பதுபோன்ற தகவல்கள் கடந்த வாரம் முதல் இணையத்தில் தீயாய் பரவியது. இந்நிலையில் தற்போது இவர்களைப் பற்றிய மற்றொரு புகைப்படம் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் பல ஹிட் திரைப்படங்களைக் கொடுத்த நடிகர் ஹிருத்திக் ரோஷன் இண்டீரியர் டிசைனர் சுஷானா கான் என்பவரை கடந்த 2000இல் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு ஹ்ரேஹான், ஹிருதன் எனும் 2 மகன்கள் உள்ள நிலையில் இந்த ஜோடி கடந்த 2014 இல் விவாகரத்துப் பெற்றனர். ஆனாலும் குழந்தைகளுக்காக தங்களுக்குள் நட்புணர்வைப் பேணி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பாடகியும் நடிகையுமான சபா ஆசாத்தை காதலித்து வருவதாகத் தகவல் கூறப்பட்டதோடு மும்பை உணவகங்களில் இருவரும் ஒன்றாக கைக்கோர்த்து செல்லும் புகைப்படங்களும் வைரலாகின. இதுகுறித்து நடிகர் ஹிருத்திக் ரோஷன் எந்தத் தகவலையும் வெளியிடாத நிலையில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று சபா ஆசாத், நடிகர் ஹிருத்திக் ரோஷனின் குடும்பத்தோடு இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
நடிகர் ஹிருத்திக் ரோஷனின் மாமாவும் இசையமைப்பாளருமான ராஜேஷ் ரோஷன் பதிவிட்டு இருக்கும் இந்தப் புகைப்படத்தில் சபா ஆசாத்தும் இடம்பெற்றுள்ளார். மேலும் ஹிருத்திக்கின் அம்மா பிங்கி ரோஷன், உறவினர் பஷ்மினா எனப் பலரும் உள்ள இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com