'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கில் இந்த இருவர்தான்: உறுதி செய்யப்பட்ட தகவல்!

  • IndiaGlitz, [Friday,March 26 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’விக்ரம் வேதா’. கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிப்பது யார் என்பது குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஹிரித்திக் ரோஷன் மற்றும் சைப் அலிகான் ஆகிய இருவரும் தான் நடிக்க உள்ளனர் என்பது குறித்து உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஹிரித்திக் ரோஷனின் 25வது படமான இந்த படத்தில் அவர் விஜய் சேதுபதி நடித்த வேதா கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சயீப் அலிகான் மாதவன் நடித்த விக்ரம் வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் கோடை விடுமுறையில் தொடங்க இருப்பதாகவும், இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை புஷ்கர் காயத்ரி இயக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 

More News

'எந்திரன்' 'விஸ்வரூபம்' படங்களுடன் கனெக்சன் ஆன 'சீயான் 60'

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் என்பதும் இப்போதைக்கு 'சீயான் 60' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள

மநீம-த்திற்கு பிரச்சாரம் செய்த ராதிகா...சித்தி என அழைத்த  சிறுவர்கள்...!

கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவாக  வாக்குகள் திரட்டிய ராதிகாவை, சித்தி என்று சிறுவர்கள் அன்போடு அழைத்துள்ளனர்.

கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் நடிகருக்கு கொரோனா: வைரல் புகைப்படம்

கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் நடிகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 

குளுகுளு சூரிய அஸ்தமனம், குட்டி உடை: ஷிவானியின் வேற லெவல் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தொலைக்காட்சி நடிகையுமான ஷிவானி நாராயணன் சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டே அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள்

மேலிடத்திலிருந்து வந்த முக்கிய அசைன்மெண்ட்...!பிரியங்கா காந்தி தமிழகம் வருகை...

தமிழகத்திற்கு காங்கிரஸ் சார்பாக பிரச்சாரம்  செய்ய, பிரியங்கா காந்தி வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.