close
Choose your channels

தனுஷ் படத்தில் நடிப்பது உண்மையா? ஹிருத்திக் ரோஷன் விளக்கம்

Thursday, August 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் தற்போது 'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் விரைவில் ஆனந்த் ராய் இயக்கத்தில் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தனுஷ், ஆனந்த் ராய் கூட்டணியில் உருவான 'ராஜண்ணா' மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் மீண்டும் இணையும் இந்த கூட்டணியின் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு கிடைத்தது

இந்த நிலையில் தனுஷ், ஆனந்த் ராய் இணையும் இந்த படத்தில் நாயகியாக சாரா அலிகான் நடிக்கவிருப்பதாகவும், மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கவிருப்பதாகவும் இதுகுறித்து ஆனந்த் ராய், ஹிருத்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்திமுடித்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இந்த தகவலை ஹிருத்திக் ரோஷன் மறுத்துள்ளார். ஆனந்த் ராய் மீது தனக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பதாகவும், ஆனால் அவர் தனுஷ் படத்தில் நடிக்க இதுவரை என்னிடம் அணுகவில்லை என்றும், ஒருவேளை இனிமேல் அவர் என்னிடம் இதுகுறித்து பேசினால் நிச்சயம் பரிசீலனை செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து தனுஷ், ஆனந்த் ராய் படத்தில் இதுவரை யாரும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும், தற்போது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த செய்தி வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment