ரிக்சா ஓட்டுநர் மகனின் கனவை நனவாக்க ரூ.3 லட்சம் கொடுத்த பிரபல நடிகர்!

லண்டனில் பாலே டான்ஸ் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என ரிக்சா ஓட்டுநர் ஒருவரின் மகன் கனவை நனவாக்க பிரபல நடிகர் ஒருவர் மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி செய்ததாக வெளி வந்திருக்கும் தகவலை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

டெல்லியைச் சேர்ந்த விகாஸ்புரி என்ற பகுதியை சேர்ந்த ரிக்சா ஓட்டுனரின் மகன் கமல்சிங். 20 வயதான இவருக்கு பாலே டான்ஸ் என்றால் கொள்ளை விருப்பம். உலகப் புகழ்பெற்ற லண்டனில் உள்ள ஆங்கில தேசிய பாலே நடனப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது இவரது கனவு. இதற்காக இவர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்தியாவிலிருந்து அப்பள்ளியில் நடனம் கற்க தேர்வான ஒரே நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கமல் சிங் லண்டன் சென்று பாலே நடனம் கற்க அவரது குடும்ப வறுமை தடையாக இருந்தது. இதனால் தன்னைப்போன்ற ஏழைகளுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அது நடப்பது சாத்தியமல்ல என்று மனம் சோர்ந்து இருந்தார்.

இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கமல்சிங் கனவு குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் உடனடியாக ரூபாய் 3 லட்சம் கமல் சிங்குக்கு கொடுத்து, பாலே நடனம் கற்று வரும்படி ஊக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து கமல்சிங்கின் பயிற்சியாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாகிஸ்தானுக்கு எதிராக ஆவணங்களை பட்டியலிட்டு ஐ.நா அவையையே தெறிக்கவிட்ட தமிழர்…

ஜெனீவாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் 45 ஆவது கூட்டம் தொடங்கப்பட்டு,

'சக்ரா' படத்திற்கு எதிராக வழக்கு: விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்குமாறு

எதிர்பார்த்ததை விட சிறப்பான அப்டேட்: 'வலிமை' நடிகர் டுவீட்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக

ரஃபேல் ரகப் போர் விமானத்தை இயக்கப் போவது ஒரு பெண் விமானியா??? சுவாரசியத் தகவல்!!!

பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன ரஃபேல் ரகப் போர் விமானங்களை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது.

ஒரு Subscribe பட்டனை அழுத்தியதற்கு 40 கார்கள் பரிசு… மலைப்பை ஏற்படுத்தும் சம்பவம்!!!

யூடியூப் சேனலை நடத்தி வருபவர்களுக்கு பெரும்பாலும் அவர்களின் Subscribe எண்ணிக்கையைப் பொருத்தே வருமானம் கிடைக்கும்.