பாலிவுட்டில் அறிமுகமாகி தமிழுக்கு வரும் கேரள இளம் நடிகர்!

  • IndiaGlitz, [Saturday,August 06 2022]

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி தற்போது தமிழ் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடித்த ’புலி’, விக்ரம் நடித்த ‘இருமுகன்’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் பிரபல தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ். இவரது மகன் ஹிர்து ஹரோன் கேரளாவில் பிறந்து வளர்ந்த நிலையில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.

விஜய் சேதுபதி நடித்த பாலிவுட் திரைப்படமான ‘மும்பைகார்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஹிர்து ஹரோன், பாலிவுட்டில் உருவான ‘கிரஷ் கோர்ஸ்’ என்ற வெப்தொடரிலும் நடித்துள்ளார். இந்த தொடரில் இவரது நடிப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது என்பதும் ஊடகங்கள் சமூக வலைதளங்கள் இவரது நடிப்பை பாராட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஹிர்து ஹரோன் தமிழில் அறிமுகமாக இருப்பதாகவும் அவரது தமிழ் எண்ட்ரி பிரமாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர் நடிக்கவிருக்கும் தமிழ் திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. பாலிவுட்டில் கிடைத்த வரவேற்பை போல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.