மீண்டும் சர்ச்சையை கிளப்பிய எச்.ராஜாவின் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, சமீபத்தில் பெரியார் குறித்து பதிவு செய்த டுவீட் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அந்த டுவீட்டுக்கு கிளம்பிய எதிர்ப்பை பார்த்து பின்னர் அந்த டுவீட் அவருடைய அட்மினால் போடப்பட்டது என்று கூறி சமாளித்தார்
இந்த நிலையில் இன்று காலை அவர் பதிவு செய்த மற்றொரு டுவீட் தமிழகத்தையே கொந்தளிக்க செய்துள்ளது. தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே. என்பதுதான் எச்.ராஜாவின் அந்த சர்ச்சைக்குரிய டுவீட்
இந்த டுவீட்டை படித்தவுடனே அவர் யாரைப்பற்றி கூறியுள்ளார் என்பது அரசியலில் பாலபாடம் படிப்பவர்களுக்கு கூட புரிந்துவிடும். இந்த டுவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. மேலும் எச்.ராஜாவின் உருவ பொம்மை எரிக்கும் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
எச்.ராஜாவின் இந்த டுவீட் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, 'பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின்தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத்தருகிறது' என்று கூறியுள்ளார். எச்.ராஜாவுக்கு அவரது சொந்தக்கட்சியிலேயே எதிர்ப்புகள் வலுத்துவருவதை தமிழிசையின் இந்த டுவீட் உறுதி செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout