எச்.ராஜா வழங்கிய வீரத்தமிழச்சி விருது யாருக்கு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
எச்.ராஜாவின் சமீபத்திய பேஸ்புக் பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் திருச்செந்தூர் பகுதி பாஜக பெண் நிர்வாகி ஒருவருக்கு அவர் வீரத் தமிழச்சி என்ற விருதை கொடுத்துள்ளார்.
நேற்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு திருச்செந்தூரில் துண்டு பிரசுரங்களை தனது ஆதரவாளர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு வழங்கி வந்தார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராகவும், பிரதமர் மோடி இதற்கு ஆதரவு கொடுப்பதை கண்டித்தும் அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது
இதனை கேள்விப்பட்ட திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி நெல்லையம்மாள் என்பவர் அய்யாக்கண்ணு துண்டு பிரசுரங்கள் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஒருகட்டத்தில் பேச்சு முற்றி கைகலப்பும் ஏற்பட்டது. அய்யாக்கண்ணு கன்னத்தில் அடித்த அந்த பெண் நிர்வாகி தனது காலில் இருந்த செருப்பை கழட்டி அய்யாக்கண்ணுவை எச்சரித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதுகுறித்து எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியதாவது: பொய்யும் புனைச்சுருட்டும் தன் ஆயுதமாகக் கொண்டு மலிவு விளம்பரம் தேடும் அய்யாக்கண்ணு நேற்றைய தினம் திருச்செந்தூரில் இழிந்த வார்த்தைகளை உபயோகித்து நெல்லையம்மாள் அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அவருக்கு தக்க பதிலடி கொடுத்த நெல்லையம்மாள் அவர்களுக்கு வீர தமிழச்சி விருது வழங்குவோம்' என்று கூறியுள்ளார்.
பொய்யும் புனைச்சுருட்டும் தன் ஆயுதமாகக் கொண்டு மலிவு விளம்பரம் தேடும் அய்யாக்கண்ணு நேற்றைய தினம் திருச்செந்தூரில் இழிந்த வார்த்தைகளை உபயோகித்து நெல்லையம்மாள் அவர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அவருக்கு தக்க பதிலடி கொடுத்த நெல்லையம்மாள் அவர்களுக்கு வீர தமிழச்சி விருது வழங்குவோம்
— H Raja (@HRajaBJP) March 9, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments