இன்று லெனின் சிலை, நாளை பெரியார் சிலை: எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு

  • IndiaGlitz, [Tuesday,March 06 2018]

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்த பாஜக, வரும் 8ஆம் தேதி தான் பதவியேற்கவுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே பாஜகவினர் அந்த மாநிலத்தில் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

குறிப்பாக நேற்று திரிபுராவில் உள்ள லெனின் சிலை புல்டோசர் கொண்டு அகற்றப்பட்டது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் லெனின் சிலை அகற்றம் குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, 'லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா சிலை.. என்று பதிவு செய்தார்.

ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, இந்த பதிவை அவர் உடனே நீக்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.