துப்பாக்கி சூடு சரிதான்: எச்.ராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவரது டுவிட்டரில் பதிவாகும் கருத்துக்களில் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. பெரியார் சிலை முதல் காவிரி பிரச்சனை வரை அவர் பதிவு செய்த டுவீட்டுக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று தூத்துகுடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இதுவரை ஒன்பது பேர் பலியாகியுள்ளனர், மேலும் 50க்கும் அதிகமானோர் தடியடியால் மண்டை உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டிகே ரெங்கராஜன் தனது டுவிட்டரில் 'ஸ்டெர்லைட் ஆலையை மூட ஜனநாயக ரீதியாக மக்கள் திரண்டு போராடும்போது காவல்துறை தடியடி, கண்ணீர் புகை, துப்பாக்கி சூடு- வன்மையாக கண்டிகிறேன்' என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளிக்கையில் 'போராட்டம் கலவரமாக மாறும் போது வேறு வழி இல்லை' என்று அவர் இந்த துப்பாக்கி சூடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு டுவிட்டர் பயனாளிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments