ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: எச்.ராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு ஏற்கனவே பாஜக தலைவர்களான தமிழிசை செளந்திரராஜன், பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துவிட்ட நிலையில் எச்.ராஜா மற்றும் சுப்பிரமணியன் சுவாமியின் எதிர்ப்பு இன்னும் கிளம்பவில்லையே என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் சற்றுமுன்னர் எச்.ராஜா 'மெர்சலுக்கு எதிரான தனது கருத்தை தற்போது பதிவு செய்துள்ளார். ஜோசப் விஜய்யின் மோடி வெறுப்பே மெர்சல் என்றும் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய் என்றும் பள்ளி, மருத்துவம் இந்தியாவில் ஏழைகளுக்கு இலவசம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மெர்சல் பட வசனம் விஜய்யின் பொருளாதார அறிவீனத்தை காட்டுவதாகவும், ஜிஎஸ்டி புதிய வரி அல்ல என்றும் சாராயத்திற்கு 58%மேல் வரி விதிக்கப்படுவதாகவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments