நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய எச்.ராஜா! எதற்கு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் மீது அவதூறு வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றபோது சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜரானார். பின்னர் நீதிமன்றம் குறித்து தான் உணர்ச்சி வேகத்தில் காவல்துறையிடம் தவறாக பேசியதாகதாகவும், அதற்காக தான் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் எச்.ராஜா நீதிமன்றத்தில் தெரிவித்தார்
நீதிமன்றத்தை அவதூறாக பேசிய விவகாரத்தில் எச்.ராஜா மன்னிப்பு கோரியதை அடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதனால் தண்டனையில் இருந்து எச்.ராஜா தப்பியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments