தீர்ப்பு எப்படி இருக்கும். கடைசி நிமிடத்தில் ஆச்சார்யா கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயலலிதா, சசிகலா உள்பட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று இந்த வழக்கில் கர்நாடக அரசு சார்பில் வாதாடிய ஆச்சார்யா கடைசி நிமிடத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் 2 நீதிபதிகளும் ஒரே மாதிரியாக தீர்ப்பு எழுதவும் வாய்ப்புள்ளதாகவும், ஒருவேளை மாறுபட்ட தீர்ப்பு அளித்தால் 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தால் சசிகலா முதல்வராக பதவி ஏற்கலாம் என்றும், விசாரணை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தால் அவர் பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments